துபாயில் செயற்கை சுவிட்சர்லாந்து! 24 மணி நேரமும் கொட்டும் 'செயற்கை மழை'
துபாய்க்குச் செல்பவர்கள் இனி ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்ல வேண்டியதில்லை!சுற்றுலாத் துறையை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்ல, துபாயில் 'ரெய்னிங் ஸ்ட்ரீட்' (Raining Street) என்ற 24 மணி நேரமும் மழை பொழியும் பிரத்யேகத் தெரு உருவாக்கப்பட்டுள்ளது.
செயற்கை மழை தொழில்நுட்பம்: தெருவின் இருபுறமும் உள்ள உயர்ந்த கட்டிடங்களின் கூரைகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள சிறப்புக் குழாய்கள் மூலம் அரை மணி நேரத்திற்கு ஒருமுறை செயற்கையாக மழை பொழிய வைக்கப்படுகிறது.
குளு குளு சீதோஷ்ணம்: தெருவின் வெப்பநிலை எப்போதும் 27 டிகிரி செல்சியஸுக்கு மேல் உயராதவாறுகண்காணிக்கப்படுகிறது. இதனால் பாலைவன நாடான துபாயில், சுவிட்சர்லாந்தில் இருப்பது போன்ற குளிரான சூழல் நிலவுகிறது.
குடைகள் இலவசம்: சுற்றுலாப் பயணிகள் மழையில் நனையாமல் ரசித்து நடப்பதற்காக இலவசக் குடைகள் வழங்கப்படுகின்றன. மேலும், இத்தெருவின் இருபுறமும் ஐரோப்பிய பாணியிலான ஆடம்பர உணவகங்களும், காஃபி கடைகளும் அமைந்துள்ளன.
0
Leave a Reply